t> கல்விச்சுடர் தடுப்பூசி போட்டவர்களில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 April 2021

தடுப்பூசி போட்டவர்களில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா

கொரோனா ஒரு புறம் வேகமாக பரவிய கொண்டிருந்தாலும் இன்னொரு புறத்தில் தடுப்பூசி போடுவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவேக் சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இதுவரை சுமார் 13 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோவேக்சின் முதல் டோஸ் போட்டு 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டு 6 வாரங்கள் கழித்து 2-வது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா தொற்று ஏற்படாது என்ற உத்தரவாதம் கிடையாது. எனவே ஊசி போட்டு விட்டோமே என்று கெத்தாக ஊர் சுற்ற கூடாது.

தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்கிறார்கள். தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு மட்டும் குறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் தடுப்பூசி போட்டவர்களில் 10 ஆயிரம் பேரில் 2 முதல் 4 பேருக்கு தொற்று வரலாம் என்று தெரிய வந்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசி இரண்டு டோசும் போட்டவர்கள் 17 லட்சத்து 37 ஆயிரத்து 178. இவர்களில் மீண்டும் தொற்று ஏற்பட்டது 695 பேருக்கு மட்டும்.

கோவிஷீல்டு இரண்டு டோசும் போட்டுக் கொண்டவர்கள் 1 கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 754 பேர். இதில் மீண்டும் தொற்று ஏற்பட்டவர்கள் 5,014 பேர்.

கோவேக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் 93 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேர். இதில் மீண்டும் தொற்று ஏற்பட்டது 4 ஆயிரத்து 208 பேருக்கு.

கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 10 கோடியே 3 லட்சத்து 2,745 பேர். அவர்களில் தொற்று ஏற்பட்டது 17 ஆயிரத்து 145 பேருக்கு.

இதன் மூலம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு மிக மிக குறைவு என்பது தெரிய வந்துள்ளது.


Source Maalaimalar

JOIN KALVICHUDAR CHANNEL