. -->

Now Online

FLASH NEWS


Wednesday 14 April 2021

மத்திய அரசை பின்பற்றி பிளஸ் 2 தேர்வை ஒத்தி வைக்க ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை


மத்திய அரசை பின்பற்றி தமிழகத்திலும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் - சா.அருணன் - நிறுவனத் தலைவர் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

மத்திய அரசு இன்று இந்திய முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் நல கருதி மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தும் அதேபோன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்கிறது

மத்திய அரசை பின்பற்றி தமிழகத்திலும் மாணவர்கள் நலன் கருதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் ஏனென்றால் கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் வேகமாக பரவிவரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் , ஏற்கனவே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொற்று பரவிவருகிறது ஆதலால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மத்திய அரசை பின்பற்றி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைத்துத்தரப்பு கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமாய் தமிழக அரசையும் பள்ளிக்கல்வித்துறையையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என‌அதன் தலைைவர்
சா.அருணன் கூறியுள்ளார்.