பெறுவதாக இருந்தது. பின்னர் 3ம் தேதி நடைபெறும் தேர்வு
மட்டும், தேதி மாற்றப்பட்டது. மற்ற தேர்வுகள் வழக்கம்போல
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. 12ம் வகுப்பு
தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முடிவு
எடுக்க கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்
கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.
அப்போது அதிகாரிகளிடம் தேர்வு தள்ளி வைப்பது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்படாததால், முடிவு
எடுக்கப்படவில்லை. இன்று மீண்டும் கூடிப்பேசி முடிவு எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.