t> கல்விச்சுடர் டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 April 2021

டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கு திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு ஏப்ரல், 17, 18 தேதிகளில் முற்பகல் மற்றும் பிற்பகலிலும் 19-ஆம் தேதி முற்பகலில் மட்டும் 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இதற்கான தேர்வுக் கூட இணையதளமான மற்றும் ல் பதிவற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவேற்றம் மூலம் மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தேர்வுக்கு வருவோருக்கான முக்கியத் தகவல்கள்..
1. தேர்வர்கள் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பின் எந்த தேர்வரும் தேர்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3.தேர்வுக் கூடம் அமைந்திருக்கும் இடத்தை அறிய நுழைவுச் சீட்டில் விரைவுத்தகவல் குறியீடு அச்சிடப்பட்டுள்ளது.
4. தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசி கொண்டு வர அனுமதியில்லை என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா. சுதன் தெரிவித்துள்ளார்.
 

JOIN KALVICHUDAR CHANNEL