கோடை காலம் தொடங்கி விட்டதால் நம்மை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள குளுவென இருக்கும் பானங்கள் மற்றும் உணவுகளை தேடி நாம் போகிறோம். அந்த வகையில் சர்பத் ஒரு அற்புதமான கோடைகால பானமாகும். இன்று நாம் பார்க்க இருப்பது தர்பூசணி சர்பத். இது மிகவும் டேஸ்டாக இருப்பதோடு, உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் தருகிறது. இப்போது தர்பூசணி சர்பத் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
½ கப் சிறிய தர்பூசணி துண்டுகள்
1 தேக்கரண்டி தேன்
200 மில்லி பால்
50 மில்லி தண்ணீர்
1 தேக்கரண்டி ரோஸ் எசன்ஸ்
1 தேக்கரண்டி ஊற வைத்த சப்ஜா விதைகள்
ஐஸ் கட்டிகள்
அலங்கரிக்க சில ரோஜா இதழ்கள்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர், தேன், மற்றும் ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கலக்கவும்.
அடுத்து, ஒரு பெரிய டம்ளர் எடுத்து அதில் தர்பூசணி துண்டுகள் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்க்கவும். இதன் மீது நீங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்த கலவையை ஊற்றவும்.
இப்போது, ஊறவைத்த சப்ஜா விதைகள் மற்றும் ரோஜா இதழ்கள் சேர்க்கவும். அவ்வளவு தான்… டேஸ்டான தர்பூசணி சர்பத் தயார்.
இந்த கோடைகால பானத்தின் சில நன்மைகள்:
1. இதில் தண்ணீர் மற்றும் தர்பூசணி இருப்பதால் இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.
2. சர்பத்தில் நாம் தேன் சேர்த்துள்ளதால், இது உங்கள் குடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
3. சப்ஜா விதைகளில் நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்திருப்பதால், இந்த சூப்பர்ஃபுட் உங்களை உற்சாகப்படுத்த உதவுகிறது. நீங்கள் விரதம் இருக்கும்போது, இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உங்கள் உடலை அன்றாட வேலைகளுக்கு எரிபொருளாக மாற்ற உதவும்.
4. ரோஜா இதழ்களை சாப்பிடுவது உண்மையில் பெரிய ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்தும். ஏனெனில் ரோஜா இதழ்கள் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன.
ரோஜா இதழ்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளது. இது உங்கள் குடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் புண்களைத் தடுக்கிறது.
ரோஜா இதழ்கள் இயற்கையான பாலுணர்வாக செயல்படுகின்றன என்று ஆயுர்வேதம் கூறுகிறது. எனவே, இது மற்றொரு பிளஸ்.
ரோஸ் இதழின் தேநீர் குடிப்பதும் உங்கள் எடையை நிர்வகிக்க உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா?
5. உங்கள் உடலில் நீர்ச்சத்து சமநிலையை பராமரிக்கவும் இந்த பானம் உதவுகிறது.