உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் பிரியாணி சாப்பிட முடியவில்லையே என்று கவலையில் இருப்பவராக இருந்தால் இனி கவலை வேண்டாம். இப்போது நாம் கொள்ளு பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
கொள்ளு - 3/4 கப்
கேரட்- 1 கப்,
உருளைக்கிழங்கு- 1 கப்,
பீன்ஸ் – ஒரு கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
பட்டை- 2,
கிராம்பு- 2,
ஏலக்காய்- 2,
பிரியாணி இலை – 1
தயிர் – 1 கப்
பிரியாணி மசாலா தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
நெய் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளு மற்றும் பாசுமதி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
அடுத்து வெங்காயம், தக்காளியினை நறுக்கி ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம், பிரியாணி இலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரியாணி மசாலா தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு, தயிர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
அடுத்து பாத்திரத்தில் அரிசி மற்றும் கொள்ளு மற்றும் தண்ணீர் சேர்த்து அரிசியை வேகவிட்டு இறக்கினால் கொள்ளு பிரியாணி ரெடி…!!
