t> கல்விச்சுடர் நடிகர் விவேக் காலமானார் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 April 2021

நடிகர் விவேக் காலமானார்

நடிகர் விவேக் காலமானார்


*மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்த விவேக் இன்று அதிகாலையில் 4.35 மணிக்கு  காலமானார்.அவருக்கு வயது 59.

 இதுவரை 200-க்கும் அதிகமான படங்களில் விவேக் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் (59), தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.





இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், எக்மோ கருவி பொருத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணியளவில் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1987-ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். 

சமூக சீர்திருத்த கருத்துகளை கூறி நடித்ததால் சின்னக் கலைவாணர் என்ற பட்டமும் நடிகர் விவேக்குக்கு உண்டு.

5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பெற்றுள்ளார் நடிகர் விவேக்.

ரன், சாமி, பேரழகன் படங்களுக்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார் விவேக்.


தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவந்தவர். 

அதனால் 'சின்னக் கலைவாணர்' என்ற பெயரையும் பெற்றார்.

2000-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விவேக். 

இதுவரை 2020-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2009-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றவர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.

JOIN KALVICHUDAR CHANNEL