வாட்டி வதைப்பதனால் குழாய்க்குள் வாசம்.
பிள்ளைகளும் வளர்கிறார்கள் பள்ளிக்கூடம் செல்கிறார்கள்
படிப்பதற்கும் படுப்பதற்கும் அதுவே தஞ்சம்.
எங்கே பிறந்தார்கள் எப்படி வாழ்ந்தார்கள்
கேட்பவரும் யாருமில்லை அவர்களுக்கும் கவலையில்லை
வாக்குரிமை இருந்திருந்தால் வாக்குறுதி கிடைத்திருக்கும்
இருப்பிடச் சான்றில்லை இந்தியர்கள் அவர்களில்லை.
கண்ணுக்குள் தேடல்கள் காத்திருப்பின் ஏக்கங்கள்
மண்ணுக்குள் போகும்வரை தொடருமாவெனும் கேள்விகள்
பிறந்தார் வாழ்கின்றார் பிறப்பித்தும் மகிழ்கின்றார்
வளர்கிறது, ஒளிர்கிறது பெருமையில் தேசம்.
*கிராத்தூரான்
