. -->

Now Online

FLASH NEWS


Wednesday 14 April 2021

ஆசிரியர்களிடையே நிலவும் குழப்பத்தை போக்குமா பள்ளி கல்வித்துறை



*கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதாகவும் யாரெல்லாம் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியுமோ அவர்களெல்லாம் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்றும் மக்கள் கூட்டம் கூடுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் எதிர்வரும் 2,3 வாரங்கள் மிகவும் சவாலானது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

      *இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்திருந்த நிலையில் இன்று மத்திய அரசும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு  இரத்து என்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருப்பதும் நடந்துள்ளது.

      *மேலும் தமிழக கல்வித் துறையும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.


        *இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வராத சூழ்நிலையில் தொடர்ந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கொரோனாவின் இரண்டாவது இன்னிங்ஸ் கோரத்தாண்டவம் ஆடும் நிலையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வரவேண்டுமா?அல்லது பள்ளியில் சென்று செய்ய வேண்டிய சில வேலைகளை வீட்டிலிருந்தே செய்யலாமா? என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

     *ஏற்கனவே தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களில் சிலருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டு உயிர்ப்பலியும் ஏற்பட்டிருப்பது ஆசிரியர்களிடையே ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

    *எனவே கல்வித்துறை ஒரு தெளிவான சுற்றறிக்கை அனுப்பி ஆசிரியர்களின் குழப்பத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.