நிகழ்வு..1
ஒருமுறை முயலும் ஆமையும் சந்தித்துக் கொண்டு இருவரில் யார் பெரியவர் என்று பேச ஆரம்பித்தன,
அப்போது முயல் சொன்னது இருவரிடையே ஓட்டப் பந்தயம் வைத்துக் கொள்ளலாம்..
பின்னர் முடிவு செய்யலாம் என்றது. ஆமையும் சரி என்று ஒத்துக் கொண்டது.
இருவரும் பந்தய தூரத்தினைக் கடக்க ஆரம்பித்தனர், அப்போது முயல் வேகமாக முன்னே சென்று விட்டு " ஆமை மெதுவாகத் தானே நடக்கும் நாம் சற்று தூங்கி விட்டுச் செல்லலாம் என்று தூங்க ஆரம்பித்தது. நன்றாக அசந்து தூங்க ஆரம்பித்தது,
அவ்வழியே வந்த ஆமை மெதுவாக நடந்து சென்று பந்தய தூரத்தினைக் கடந்து வெற்றி பெற்றது.
நிகழ்வு. 2 .
.............
திறமை இருந்தும் தன்னுடைய சோம்பலால் தோற்றதனை நினைத்து முயல் கவலையுற்றது.
பின்னர் மீண்டும் சென்று ஆமையை போட்டிக்கு அழைத்து இம்முறை முயல் வெற்றி பெற்றது.
நிகழ்வு... 3 .
....................
மீண்டும் ஆமையும் முயலும் சந்தித்துக் கொண்டு இம்முறை பந்தயத் தூரத்தினை அதிகபடுத்திக் கொண்டு ஓடலாம் என்று பேசிக் கொண்டன,
அதன்படி இரண்டும் ஓட ஆரம்பித்தன, வழக்கம் போல் முயல் வேகமாக ஓடிச் சென்றது,
அங்கே பார்த்தால் நடுவில் ஒரு நீர் நிரம்பிய குளம் இருக்க அதனைக் கடக்க முடியாமல் கரையிலேயே நின்றது,
மெதுவாக வந்த ஆமை குளத்தினைக் கடந்து சென்று பந்தய தூரத்தினை எட்டியது , இதைக் கண்டு முயல் கவலையுற்றது.
நிகழ்வு. 4 .
.................
மீண்டும் ஒருமுறை இவ்விரண்டும் சந்தித்துக் கொண்டன, அப்போது அவை , நாம் தனித்தனியா ஓடி நமக்குள் போட்டி வைத்துக் கொள்வதை விட,
இருவரும் இணைந்து சென்று காலத்துடன் நேரத்துடன் போட்டியிடுவோம் என்று பேசிக் கொண்டன..
போட்டிக்கான களத்தினில் இறங்கின . முதலில் முயல் முதுகில் ஆமை ஏறிக்கொண்டு வேகமாக சென்று குளக்கரையை அடைந்தன ,
பின்னர் ஆமை முதுகில் முயல் ஏறிக் கொண்டு குளத்தினைக் கடந்தன.
இப்போது இரண்டும் நேரத்தினைப் பார்த்த போது முன்பு தனித்தனியே இவை ஓடிய போது எடுத்துக் கொண்ட நேரத்தினை விட இப்போது மிக குறைவான நேரமே செலவு ஆனது.
முயலின் திறமை வேகமாக ஓடுவது !
ஆமையின் திறமை நீரில் நீந்திச் செல்வது !
ஆம்.,நண்பர்களே..,
வெற்றிக்கு எல்லாம் கூட்டு முயற்சி தான் காரணம்.
நம்மில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகள் இருக்கும் ,
எனவே நம்மில் யார் பெரியவர்கள் என்று பார்க்காமல் ஒருவரின் திறமையை மற்றவர்கள் அறிந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டாக பயன்படுத்தினால் வெற்றி கிடைப்பது திண்ணம்..