t> கல்விச்சுடர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 May 2021

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர்


12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது" - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்.

12 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது என்பது தற்போது சாதரணமாக விஷயம் அல்ல.

தேர்வை விட மாணவர்களின் நலன் முக்கியம்.

முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு தேர்வு நடத்துவதா (அ) ரத்து செய்வதா என தெரிவிக்கப்படும்.
 
முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தர பரிசீலனை

 நீட் தேர்வு குறித்து இதுவரை பேச்சு ஏதும் தொடங்கவில்லை

நாளையும் நாளை மறுநாளும் ஆலோசனை நடைபெறும் என
அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-



12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 10-ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி கருத்து கேட்கப்பட்டு வருகிறது. 

மாணவர்களின் எதிர்காலம் என்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகவும் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது. 

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தி உள்ளார்.

மற்ற மாநிலங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலோசனை முடிவுகளை முதல்வரிடம் தெரிவித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


JOIN KALVICHUDAR CHANNEL