t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை MEDIA BULLETIN - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 May 2021

தமிழகத்தில் இன்று மேலும் 27,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை MEDIA BULLETIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 27,397பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 241பேர் உயிரிழந்து உள்ளனர். 23,110பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,55,998மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 27,397 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,13 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 27,384பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,51,362ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,38,54,797 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இன்று கொரோனா உறுதியானவர்களில் 16,101பேர் ஆண்கள், 11,296 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 8,13,925ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,37,399ஆகவும் அதிகரித்து உள்ளது. 23,110பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,96,549 ஆக உயர்ந்தது. 241பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 90 பேர் தனியார் மருத்துவமனையிலும், 151 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,412ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL