கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அமெரிக்கா பைசர் தடுப்பூசியை முதன்மையாக செலுத்தி வருகிறது.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று தாக்காது என்பதற்கு அரசு உத்தரவாதம் கொடுக்கவில்லை. கொரோனா தொற்று தாக்க வாய்ப்புள்ளது. ஆனால் உயிரிழப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.தேசிய நிபுணர் குழு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து புதிய பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தெரிவித்துள்ளது.அந்த பரிந்துரையில் ‘‘முதல் டோஸ் செலுத்திய நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தபின், 3 மாதங்கள் கழித்து 2-வது டெஸ்ட் செலுத்த வேண்டும். ஒரு நபர் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலோ, அல்லது ஐசியூ-வில் இருந்து சிகிச்சை பெற்றாலோ, குணமடைந்தபின் 4 முதல் 8 வாரங்கள் கழித்து கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.கொரோனா தடுப்பூசி செலுத்திய அல்லது கொரோனா பாதித்து ஆர்டி-பிசிஆர் டெஸ்டில் நெகட்டிவ் வந்த நபர், 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம். தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன், ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் பரிசோதனை தேவையில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
19 May 2021
முதல் டோஸ் எடுத்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், 2-வது டோஸ் எப்போது?- மத்திய அரசு புதிய பரிந்துரை