t> கல்விச்சுடர் பி.ஜி நீட் தேர்வு 4 மாதம் ஒத்திவைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 May 2021

பி.ஜி நீட் தேர்வு 4 மாதம் ஒத்திவைப்பு

முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலால், மிக மோசமான கட்டத்தை நாடு எதிர்த்துப் போராடுவதால், அதிகமான மருத்துவ பட்டதாரிகளை கிடைக்கச் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.


பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொரோனா தடுப்பு பணிகளில் திறம்பட கையாள மனித வளங்களை மேம்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மறு ஆய்வு செய்தார். முதுகலை நீட் தேர்வுக்கு தயார் ஆகும் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

முன்னுரிமை

100 நாட்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன் அடிப்படையில் அந்த மாணவர்களுக்கு அரசு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் அலுவலக வட்டார அறிவிப்பு தெரிவிக்கிறது.

JOIN KALVICHUDAR CHANNEL