t> கல்விச்சுடர் தமிழகத்தில் 5.64 லட்சம் தபால் வாக்குகள் பதிவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 May 2021

தமிழகத்தில் 5.64 லட்சம் தபால் வாக்குகள் பதிவு



தமிழகத்தில் நேற்று வரை 5.64 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையர் கூறியது,
தமிழகம் முழுவதும் இருந்து நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணிகளில் 35,836 காவலர்கள் ஈடுபடவுள்ளனர்.
மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மைய ஊழியர்களுக்கு பதிலாக மாற்று ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்கள் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL