t> கல்விச்சுடர் சுவையான ஊட்டச்சத்து மிகுந்த மொறு மொறு பச்சைப்பயறு தோசை செய்வது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 May 2021

சுவையான ஊட்டச்சத்து மிகுந்த மொறு மொறு பச்சைப்பயறு தோசை செய்வது எப்படி?

 
தேவையானவை:
பச்சை பயறு - 1கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு

செய்முறை: 
முழு பச்சை பயறை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

நீரை வடிகட்டி, பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம் , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பின் தோசை தவாவை சூடேற்றி, அதில் கரைத்து வைத்த மாவை ஒரு கரண்டி ஊற்றி மெலிதான தோசை வார்க்கவும். 

அடுப்பை குறைந்த தணலில் வைத்து இரண்டு பக்கமும் வேக விடவும். சட்னியுடன் சாப்பிடவும்.

உடலுக்கு மிக வலுவான புரதம் உள்ள தோசை ரெடி. 

எடை குறைக்க நினைப்பவர்கள் ‌இட்லி, தோசைக்கு மாற்றாக இதை சாப்பிட்டு பயன்பெறலாம்.

JOIN KALVICHUDAR CHANNEL