*தேவையானவை*
கேழ்வரகு மாவு -1 கப் ,
பச்சரிசி -1 கப்,
தண்ணீர்- 6 கப் .
*செய்முறை*
முதலில் அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பின்பு அரிசியை சேர்த்து வேக வைக்கவும் .
அரிசி நன்கு வெந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கப் கேழ்வரகு மாவு சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கி வைத்து கிளறி உருண்டைகளாக பிடிக்கவும்.