ஒரு நாள் நள்ளிரவு வேளையில் ஒரு திருடன் ஒரு வீட்டை நோக்கி சென்று சன்னல் வழியாகப் எட்டிப் பார்க்கிறான்..
வீட்டினுள்ளே ஒரு வயதான பாட்டி மூச்சுத் திணரலுடன் போராடுவதோடு அந்த மூச்சுத்திணறலை நிறுத்துவதற்காக அருகில் உள்ள மேசை மீது வைக்கப்பட்டு இருந்த இன்ஹேலரை எடுக்கத் தனது கைகளை நீட்டி.. நீட்டி.. எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ...
ஆனால் அந்த இன்ஹேலரை எடுக்க முயற்சி செய்யும் போதெல்லாம் அது நழுவி...நழுவிச் செல்வதைக் கண்ட அந்தத் திருடன் சன்னல் வழியாகக் கையைவிட்டு அதை எடுத்துப் பாட்டியிடம் கொடுக்கிறான்...
இன்ஹேலரை எடுத்துக் கொடுத்தது திருடன்தான் என்று அறிந்தாலும் அந்த வயதான பாட்டி அவனை வீட்டுக்குள் அழைக்கிறார்
அப்போது உள்ளே சென்ற அவன் சொல்லுகிறான் பாட்டி நான் திருட்டுத் தொழில் செய்பவன் அல்ல ..
எனது அம்மா மிகவும் முடியாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரோடு போராடிக்கொண்டு இருக்கிறார் ...
ஆப்ரேசனுக்குப் பணம் தேவை அதற்காகத்தான் நான் திருட வந்தேன் என்று சொல்லுகிறான்...
உடனே அந்த பாட்டி சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு அலமாரிக்கு அருகில் சென்று அதன் உள்ளிருந்து இரண்டு தங்க வளையல்களை எடுத்துக் கொடுக்கிறார் ..
உடனே அந்த திருடன் அந்த வயதான பாட்டியின் காலில் விழுந்து அழுகிறான்..
அப்போது அந்த பாட்டி மகனே நீ இங்கு வந்ததால் இரண்டு பேருக்கு நன்மை நடந்திருக்கிறது இரண்டு பேரை காப்பாற்றி இருக்கிறாய் என்றதோடு என்னையும் ஏன் உன் அம்மாவாக ஏற்றுக்கொள்ளக்கூடாது...என்றார்.
ஒருகெட்டவன் நல்லவனாகலாம்
ஒருநல்லவன் கெட்டவனாகலாம்...
அதுபோல பிறப்பால் மட்டும் யாரும் யாருக்கும் அப்பா_அம்மா அண்ணன், தங்கை தம்பி_தங்கை.... என்ற இதுபோல உறவுகளாவதில்லை , சில சந்தர்ப்பங்களில் சிலர் பிறப்பால் உள்ளஉறவையும் விஞ்சி_நிற்பர்..
அது ஒரு அனுக்கிரகம்
எல்லோராலும் ஒதுக்கப்பட்ட_சிலர் யாராக்காவதும் தேவைப்படுபவராக மாறலாம். அவர்களின் உள்ளில் நற்குணம் காணாது ஒதுக்கியவர்கள்_காணாதது சிலருக்கு நன்மைகளாக_இருக்கலாம்..
சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும், அறியாமையாலும், அறிவின்மையாலும் ,வழிகாட்டுதல் இல்லாமலும் வழி மாறிச் செல்பவர்களை மாற்றவாய்ப்பு கிடைத்தால் அவர்கள்யூ டேன் எடுத்து
அவர்கள் நல்வழியிப்பயணம் தொடங்கலாம் அதற்கான ஒரு வாய்ப்பாக நாம் ஏன் இருக்கக்கூடாது...?