t> கல்விச்சுடர் சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் - நிர்வாகம் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 May 2021

சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் - நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவில் 2வது அலை பாதிப்பு காரணமாக, வரும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
இதனைத்தொடர்ந்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு வசதியாக நாளை வார இறுதி நாள் பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், நாளை (மே 9-ம் தேதி) மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL