t> கல்விச்சுடர் தினம் ஒரு குட்டிக்கதை- பால.ரமேஷ் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 May 2021

தினம் ஒரு குட்டிக்கதை- பால.ரமேஷ்


 *ஒரு வாலிபன் ஒரு பெண்ணை வெகுநாட்களாக பின் தொடர்ந்து வந்தான்.
"இவன் எதற்காக என் பின்னால் வரவேண்டும்! யாரு இவன். என்னை காதலிக்கிறானா..என யோசித்தாள் அந்த பெண்.

தன் தந்தையிடம் அவனை பற்றி கூற, அவன் என்னிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் உன்னைப் பார்க்க வருகிறான். நீ பயப்படாதே, அவன் உன்னை எந்த தொந்தரவும் செய்யமாட்டான். என்று தந்தை சொல்கிறார். என்னப்பா இது!ஏன் இப்படி??? என்று அவள் கேட்க.

உனக்கு இருதய புற்றுநோய் இருந்ததே ஞாபகம் இருக்கிறதா! அவன் தாயார் தான் இறந்த பிறகு அவர் இதயத்தை உனக்கு தானமாக கொடுத்தார் என்று தந்தை சொல்ல, இதை கேட்டவள் அதிர்ந்து போய் விடுகிறாள். அவர்களுள் நட்பு ஏற்பட்டு 1 வருடத்தில் காதலாக மாறிவிட்டது.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது... அந்த குழந்தைக்கு தன் தாயாருடைய பெயரை வைத்து "வாங்கம்மா"! "சாப்பிடுங்கம்மா"! என்று செல்லமாகவும், மரியாதையாகவும் கொஞ்சுவான். தன் தாயாரின் நினைவு தினம் அன்று இரவு அம்மாவின் கல்லறைக்கு சென்றுவிட்டு வீடு வருகிறான்.

அப்போது அந்த 2 வயது குழந்தை தூக்கத்தில் தேன் சிந்தும் குரலில் "எங்கப்பா போய்ட்டு வர" விஷப்பனி பெய்கிறதல்லவா!" சீக்கிரம் வீடு வரக்கூடாதா"! என்று சொல்கிறது. அந்த குழந்தையின் குரல் தன் தாயாரின் குரல் போல் இருப்பதை உணர்ந்தான். 2 வயது குழந்தை எப்படி பேசமுடியும் என்று உறைந்து பார்க்கிறான். அந்த குழந்தை மறுபடியும் தூக்கத்தில் உளறியது..

"சாப்டியாப்பா"! நான் வேணா ஊட்டி விடவா"!!!

இதை கேட்டவன் "அம்மா" என்று அலறி தன் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு "என்ன பெத்த ஆத்தா! அம்மா" அம்மா" அம்மா!!! கதறி அழுகிறான். கணவனின் தாய் பாசத்தை பார்த்த அவன் மனைவியும் அழுகிறாள்.

 *நாம் எப்படி இருந்தாலும் நம்மை நேசிக்கும் ஒரே ஜீவன் நம் தாயார்* *மட்டும் தான்* *நண்பர்களே. பெற்ற தாயை தவிர வேற யாரிடமும் அதிக அன்பு வைத்து விடாதீர்கள், அதை போல ஒரு* *சுயநலமற்ற அன்பு வேறு எதுவும் இல்லை உலகில்.*

JOIN KALVICHUDAR CHANNEL