நாளை முதல் முழு ஊரடங்கு காலத்தில் எவற்றுக்கெல்லாம் அனுமதி - தமிழ்நாடு காவல்துறை
இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள்
அனுமதிக்கப்படும்
1. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
2.பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்
3. பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள்
(தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை மற்றும் அனைத்து
மாவட்டங்களிலும் வாகனங்கள் மூலம் வழங்க ஏற்பாடு)
4. தலைமைச் செயலகம், மாவட்டங்களிலுள்ள
அத்தியாவசியத்துறைகள் மட்டும் இயங்கும்
5. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல்
தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றை வீட்டிலிருந்தே
பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
6.மின்னணு சேவை (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கும்.
7. உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும்,
நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை
6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும்
அனுமதிக்கப்படுகிறது.
8. மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும்
நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.
9.பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும்
10. ATM மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
11. வேளாண் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை
கொண்டு செல்லும் வாகனம் மற்றும் சரக்கு வானகங்கள்
அனுமதிக்கப்படும்.
12. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மட்டும்
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
13. மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு
தேவையில்லை.
14. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
15. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை
தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ
உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே
தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
