t> கல்விச்சுடர் கொரோனா இழப்புகள் தொடர்கதையா - கிராத்தூரான் கவிதை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 May 2021

கொரோனா இழப்புகள் தொடர்கதையா - கிராத்தூரான் கவிதை


இறப்புகள் என்பது தொடர்கதையா
இறைவா இதற்கொரு முடிவில்லையா?

மாணவ மாணவிகள் இடையிலே இருந்தார்
அப்போதும் பாதுகாப்பாய்த் தானே உணர்ந்தார்
இப்போது மட்டும் ஏனித்தனை இறப்புகள்
எண்ணில் அடங்காத ஆசிரியர் இழப்புகள்.

விதியென்று சொல்லியே செல்வது சரியா
மதிகெட்ட சிலராலே வந்திட்ட சதியா
கதி கெட்டுத் தேர்தலுக்காய் உழைத்ததன் பலனா
கவனமாக அனைவரும் இருக்காத குறையா.

பள்ளிகள் திறந்தபின் மட்டும் தான் தெரியுமா
இறந்தவர் எண்ணிக்கை வெளியிலே பரவுமா
அப்போதும் ஒரு கூட்டம் அது கண்டு மகிழுமா
மனதின் வக்கிரங்கள் வெளிவந்து குதிக்குமா?

நாளைய சமுதாயச் சிற்பிகளாம் நீங்கள்
நலமுடன் இருப்பதே நல்லோரின் வேண்டல்கள்
உங்களையும் காத்து மற்றோரையும் காப்பதே
இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதே.

இனியேனும் இறப்புகள் தொடராமல் இருக்கட்டும்
கொரோனாத் தீநுண்மி பரவாமல் ஒழியட்டும்
நிம்மதியும் மகிழ்ச்சியும் உலகெங்கும் பரவட்டும்
வேதனைகள் மறைந்து நல்லமைதி நிலைக்கட்டும்

அமைதியும் நிம்மதியும் உலகெங்கும் நிலைக்கட்டும்.

*கிராத்தூரான்

JOIN KALVICHUDAR CHANNEL