. -->

Now Online

FLASH NEWS


Wednesday 19 May 2021

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் காலமானார்




இரங்கல் செய்தி

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும்,
ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு
உறுப்பினரும்,
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம்,
சடையங்குப்பம்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
திரு ஏ.இரமேஷ் அவர்கள்
சென்னை தனியார் மருத்துவமனையில்,
கடந்த 16 நாட்களாக
கொரானா தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,

18/05/2021அன்று இரவு 9.40 மணியளவில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆசிரியர் அரசு ஊழியர்கள் போராட்டங்களை சிரத்தையுடன் முன்னெடுத்து வழிநடத்தியவர்.

தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட
சுமார் 53 ஆயிரத்திற்கும் ஆசிரியர்களுக்குகாலமுறை ஊதியம் பெற்றிட அயராது பாடுபட்டவர்.

தலைவர் கலைஞர்
தமிழக முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர்களின் வாழ்வாதார நிதியினை திரட்டி முதல்வரிடம் வழங்கிட சிரத்தையுடன் செயல்பட்டவர்.

காலமுறை ஊதியம் வழங்கப்பட்டதற்காக கடந்த 2007 ஆம் ஆண்டு
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முத்தமிழ் அறிஞர் , டாக்டர். கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற பிரமாண்டமான நன்றி அறிவிப்பு மாநாட்டினை செம்மையாக ஒருங்கிணைத்தவர்.

சமூக செயற்பாட்டாளராக பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் *தமது சொந்த நிதியில் பள்ளி மாணவர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக செய்து வந்தவர்.

சென்னை வெள்ளம், கஜா புயல், நீலகிரி வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களில் மக்களுக்கு நிவாரண உதவிகளை சங்கம் வழங்குவதற்கு உதவிகரமாக இருந்தவர்.

சங்கங்கள் கடந்து ஆசிரியர் அரசு ஊழியர்கள் மீது தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டியவர்.

மாண்புமிகு.
தமிழக முதலமைச்சர் தளபதியார் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டவர்.
தேர்தலுக்கு முன்பு அந்நாளைய எதிர்க்கட்சித் தலைவரும்
தற்போதைய முதலமைச்சருமான மாண்புமிகு தளபதியார்
அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்வை முன்னெடுத்து சிறப்பாக நடத்திக் காட்டியவர்.

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்காக தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர்.

அரசுப்பள்ளி மாணவர்கள் மீது அளவில்லாத பற்று கொண்டு மாணவர்களின் கல்விநலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

கடந்த கொரானா முதல் அலையின் போது தன்னுடைய பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தி மக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி கடைசிவரை சமூகத்திற்கும் , சங்கத்திற்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளவராக இருந்த எங்கள் பொதுச்செயலாளரின் பேரிழப்பை ஈடுசெய்ய இயலாமல் தவிக்கிறோம்.


வேதனையுடன்...
கு.தியாகராஜன்.

மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ ஜியோ.

மற்றும்

மாநில , மாவட்ட , ஒன்றிய பொறுப்பாளர்கள்,
TAMS

அன்னாரின் மறைவுக்கு கல்விச்சுடர் இணைய தளம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது