t> கல்விச்சுடர் இ-பாஸ் தேவையில்லை...! இ-பதிவு போதும்! தமிழக அரசு விளக்கம்!! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 May 2021

இ-பாஸ் தேவையில்லை...! இ-பதிவு போதும்! தமிழக அரசு விளக்கம்!!




கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின்
வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 10.05.2021 மணி முதல்
24.05.2021 காலை 4.00 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முழு ஊரடங்கு காலத்தில்,
தமிழ்நாட்டில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, 15.05.2021
காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஒருசில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இன்று
(14.05.2021) அரசு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, தற்போது ஒருசில தொலைக்காட்சி ஊடகங்களில், அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு,
நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி ஒளிபரப்பப்படுகிறது. மாறாக,
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான
திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு வேலைவாய்ப்பு
போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை
https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு(e-registration) செய்து,
இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான
தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று இதன் மூலம்
தெரிவிக்கப்படுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL