t> கல்விச்சுடர் தமிழகத்தில் 13–ந்தேதி வரை வங்கி வேலை நேரம் குறைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 June 2021

தமிழகத்தில் 13–ந்தேதி வரை வங்கி வேலை நேரம் குறைப்பு


தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் 14-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13-ந் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

வங்கி கிளைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும், வங்கி பரிவர்த்தனைகள் ஏற்கனவே அறிவித்ததுபோல் பகல் 2 மணி வரை மட்டும் இருக்க வேண்டும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல, மாலை 5 மணி வரை செயல்படும். கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், மாற்று முறையில் செயல்பட வேண்டும்.

ரொக்கப் பரிவர்த்தனை, ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு என்.இ.எப்.டி. எனும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், ஐ.எம்.பி.எஸ். எனும் உடனடி கட்டண சேவை மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். என்ற ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் சேவை, நிகழ்நேர மொத்த தொகை செலுத்துதல் போன்ற சேவைகளை வழங்க வேண்டும். அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளை அளிக்க வேண்டும். ஏ.டி.எம்., ரொக்கம் செலுத்தும் எந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL