அரிசி மாவு - இடியாப்பம் செய்ய தேவையான அளவு
முட்டை -4
மிளகு தூள்-1ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 1
சோம்பு- 1 ஸ்பூன் அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன் அளவு
மிளகாய் தூள் - தேவைக்கு
பட்டை, லவங்கம் மற்றும் கரம் மசாலா
செய்முறை:
முதலில் அரிசியை மெசினில் கொடுத்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இடியாப்பம் செய்ய தேவையான அளவு மாவை எடுத்து அதில் கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து கிளறவும்.
பின் இட்லி தட்டில் இடியாப்பம் செய்யவும். பின் ஆறவைத்து உதிர்த்து கொள்ள வேண்டும்.
முட்டைகளை மிளகு தூள் , உப்பு சேர்த்து ஆம்லெட் போடவும். பின்னர் ஆம்லெட்டை பொடியாக நறுக்கவும்.
எடுத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு, மசாலா பொருட்களை மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு , அரைத்த மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
நன்கு சுருண்டு வரும் போது உதிர்த்து வைத்துள்ள இடியாப்பம் மற்றும் பொடியான ஆம்லெட் சேர்த்து மசாலாவுடன் கிளறவும்.
கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். பிரியாணியை மிஞ்சும் சுவையில் முட்டை மசாலா பிரியாணி தயார்.