தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையில், தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கும் நிலை வராது என்றார்.
தமிழகத்தில் இதுவரை 2,382 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
