t> கல்விச்சுடர் கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் என்னென்ன தெரியுமா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 June 2021

கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் என்னென்ன தெரியுமா?

தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல், தேநீர்க் கடைகள்
காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க
அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொது
மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை.

மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல,
இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம். இங்கும்
பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

பொது மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து
சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021
முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.

கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள
ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும். வாங்கும் கட்டுமானப்
பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில்
கொண்டு, கட்டுமான
நிறுவனங்களின் அலுவலகங்கள்
50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது

JOIN KALVICHUDAR CHANNEL