. -->

Now Online

FLASH NEWS


Tuesday 8 June 2021

கொரோனா கட்டுப்பாட்டு அறை , நெறிபடுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் மைய பணிகளுக்கு ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்பு

பள்ளிக் கல்வித்துறை. கடலூர் மாவட்டம்.

மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு



தமிழ் நாடு அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறை , நெறிபடுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் மைய பணிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடலூர் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் சீரிய முயற்சியில் தன்னார்வலர்களாக பங்கேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு.ப.சுந்தரமூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து அறவுரை கூறி வாழ்த்து தெரிவித்தார். இப்பேரிடர் கால பணியில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா ஆ, புதுப்பாளையம் தூய மரியன்னை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜீவா ஜாக்குலின் , வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தெரேசா கேத்ரின், குறிஞ்சிப்பாடி ஆண்டார்முள்ளிப்பள்ளம் தலைமை ஆசிரியர் திருமதி.செல்வி , வாண்டியாம்பள்ளம் தலைமை ஆசிரியர் அமுதா , ஆத்திரிகுப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன் எல்லப்பன்பேட்டை ஆசிரியர் இராயப்பன், மற்றும் ஆசிரியர்கள் சுந்தர், கனியா சாந்தகுமார், மதன்லால் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.


 பேரிடர் கால பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கல்வி துணை ஆய்வாளர் திரு.விஜயகுமார் ஆகியோர் சந்தித்து பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் பணியை சிறப்பாக தொடர அறிவுரை வாழ்த்தினார் கூறினார்.