t> கல்விச்சுடர் பள்ளி செல்லும் செல்லமே! - படித்ததில் பிடித்த கவிதை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 June 2021

பள்ளி செல்லும் செல்லமே! - படித்ததில் பிடித்த கவிதை

பள்ளி செல்லும் செல்லமே!




புத்தம் புது வகுப்பு போகும் செல்லமே!

நீ
புன்னகையை ஏந்திக் கொண்டே போடி செல்லமே!

சத்தமிடும் கடல் அலை போல ஓடு செல்லமே!

நீ
கற்றுக் கொள்ள வித்தைகள் தேடு செல்லமே!


புத்தன் காந்தி வாழ்ந்த நம் தேசமே!

அதன்
பெருமைகளை நித்தம் நீயும் போற்ற வேணுமே!

சேத்துக்குள்ளே பூத்திருக்கும் பூவைப் போலவே!

நீ
சிந்தனையால் மின்னிட வேணும் செல்லமே!

எத்தனையோ ஞானிகள் வாழ்ந்த மண்ணிலே!

நீ
இன்று வாழ்வதிலே உனக்கு உண்டு பெருமையே!

வாத்தியார்கள் சொல்லித்தரும் பாடம் அனைத்துமே!

உன்
வளர்ச்சிக்கு துணையாக மாறும் உண்மையே!

சுத்தம் செய்யும் நீரின் முறை அறிய‌ வேணுமே!

நீ
சுற்றும் காற்றின் வலிமை பெற வேணுமே!

அத்தனையும் சுட்டு நிற்கும் நெருப்பெனவே!

நீ
ஆற்றலிலே உயர்ந்தே வாழ வேணுமே!


– இராசபாளையம் முருகேசன்.



JOIN KALVICHUDAR CHANNEL