t> கல்விச்சுடர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 June 2021

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டும் இவ்விருது 15.08.2021 சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ரூ. 50,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கிய “மாண்புமிகு முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கான” விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கான தகுதிகள் கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

கீழ்காணும் தகுதிகள்:-
1. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்தஏப்ரல் 1, 2021 (01.04.2021) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2021 (31.03.2021) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

2. கடந்த நிதியாண்டில் (2020-2021)அதாவது 01.04.2020 முதல் 31.03.2021 வரை) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.

4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, சமூக / சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

5. அவர்கள் செய்த சேவையின் தாக்கம் தெளிவாக கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

6. மத்திய / மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள்,பொதுத் துறை நிறுவனங்கள் பல்கலைகழகங்கள் / பள்ளி / கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

7. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, மதிப்பு இவ்விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

8. விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைய தளமான http://www.sdat.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள்சமர்ப்பிக்க வேண்டும்.

9. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2021 மற்றும் நேரம் மாலை 5.00 மணி ஆகும்.

இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர். சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்
 

JOIN KALVICHUDAR CHANNEL