t> கல்விச்சுடர் சாப்பிடும் போது பேசக்கூடாது ஏன் தெரியுமா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 June 2021

சாப்பிடும் போது பேசக்கூடாது ஏன் தெரியுமா?

மனித முகத்தில் மண்டை ஓட்டின் அதாவது கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது, 
மருத்துவம். 

இந்தத் தொண்டையை மேலும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 

அவை: முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை.வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது.

அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராசிங் போன்றது.

சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக் கொண்டால் உணவுப் பாதை தான் ரெயில்வே பாதை. 

சாலை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க் கொண்டிருக்கும். உணவுப் பாதையில் உணவு வரும் போது அதாவது நாம் சாப்பிடும் போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும். உணவு போனதும் மீண்டும் திறந்து கொள்ளும்.

இதில் எதற்கு கதவு போன்ற அமைப்பு என்றால் உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய் விடக்கூடாது என்பதற்காகத் தான். 

பேசிக்கொண்டே சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.

அப்படி சாப்பிடும் போது சுவாசக் குழாய் திறக்கும்.

சுவாசக் குழாய் திறந்தால் தான் பேச முடியும். 

இப்படித் திறக்கும் சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருள் தவறாக நுழைந்து விடும். 

இதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் உள்ளே நுழைந்த உணவை வெளியே தள்ளும். இதைத் தான் புரை ஏறுதல் என்கிறார்கள். 

மருத்துவத்துறையில் இதை ‘வாட்ச் டாக் மெக்கானிசம்‘ என்று கூறுகிறார்கள்.

சிலருக்குத் தூங்கும் போது புரையேறும். 

அசந்து தூங்கும் போது அவரையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடும். 

மனிதர் தூக்கத்தில் தானே செய்கிறார் என்று சுவாசக் குழாய் விட்டுவிடாது. 

உடனே அந்த உமிழ்நீரை வெளியே தள்ளும். இதைத்தான் தூக்கத்திலேயே புரையேறுதல் என்கிறார்கள்.

தூங்கும் போது நடக்கும் மற்றொரு முக்கியமான நிகழ்வு குறட்டை. 

விழித்திருக்கும் போது தாடை சதைகள் கெட்டியாக இருக்கும். 

தூங்கும் போது இந்தக் கெட்டித் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து விடும். 

ஆழ்ந்த தூக்கத்தில் முழுமையாக கட்டுப்பாடு இழந்து சுவாசக் குழாயின் மேல் விழுந்து அழுத்தும். 

இதனால் தடங்கல்கள் உண்டாகி காற்று போகும் முயற்சி தடைபடும். 

அப்போது ஏற்படுகிற கொர்... கொர்.. சத்தம் தான் குறட்டை விடுதல் என்கிறார்கள்.

குறட்டை விடுதல் சில சமயம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறுகிறார்கள் 

மருத்துவர்கள். குறட்டையைத் தடுக்க 500 வழிகள் இருப்பதாகவும், இதில் எது ஒத்துவருமோ அதன் மூலம் குறட்டையைக் கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். 

அதிகமாக குறட்டை விடுபவர்கள் கண்டிப்பாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரைப் பார்க்க வேண்டும்...!!!

JOIN KALVICHUDAR CHANNEL