t> கல்விச்சுடர் தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல், மூலம், நரம்புத்தளர்ச்சி, வாந்தி போன்ற நோய்களுக்கு அதிமதுரத்தை பயன்படுத்தும் முறைகள்.. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 June 2021

தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல், மூலம், நரம்புத்தளர்ச்சி, வாந்தி போன்ற நோய்களுக்கு அதிமதுரத்தை பயன்படுத்தும் முறைகள்..



தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல், 
மூலம், நரம்புத்தளர்ச்சி, வாந்தி போன்ற நோய்களுக்கு அதிமதுரத்தை பயன்படுத்தும் முறைகள்..

 தொண்டை/இருமல்/அதிமதுரம்

அதிமதுரத்தை ஒரு சிறு துண்டு வாயில் போட்டு ஒதுக்கி கொள்ள இருமல் குணமாகும். 

தொண்டை/ வறட்டு இருமல்/அதிமதுரம்

அதிமதுரம் எடுத்து தண்ணியில வெறுமனே ஊறவச்சு காலையில எடுத்து வடிகட்டி சூடாக்கி கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் இருமல் குணமாகும். 

 தொண்டை/இருமல்/அதிமதுரம்

அதிமதுரம், கடுக்காய், மிளகு ஓர் அளவாக எடுத்து இளவறுப்பாய் வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து கொடுக்க இருமல் குறையும்.

 தொண்டை/இருமல்/அதிமதுரம்

அதிமதுரம், சீரகம் மற்றும் உலர்ந்த திராட்சை ஆகிய மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். குழந்தைகளுக்கு அதனுடன் சுத்தமான தேன் கலந்து கொடுத்து வந்தால் இருமல் குறையும். 

தொண்டை/இருமல்/அதிமதுரம்

அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி, சிற்றரத்தை வகைக்கு 10 கிராம் எடுத்து நீர்விட்டு அரைத்து ¼ ஆழாக்கு நீரில் கலக்கி பொங்கவிட்டு வடித்து சிறிது தேன் சேர்த்து கொடுக்க இருமல் குறையும். 

தலை/ஒற்றை தலைவலி/அதிமதுரம்

அதிமதுரம், சோம்பு இவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ஒற்றை தலைவலி குறையும். 

தொண்டை/தொண்டை கரகரப்பு, இருமல், மூலம், நரம்புத்தளர்ச்சி/அதிமதுரம் பொடி

அதிமதுரப்பொடி தொண்டை கரகரப்பு, இருமல், மூலம், நரம்புத்தளர்ச்சி போன்றவற்றிற்கு மிகச்சிறந்த ஒன்று. இதனை 1 அல்லது 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர வேண்டும். 

வாய்/வாய்ப் புண்/அதிமதுரம்

அதிமதுரத்தை தட்டி தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் நீங்கும். வாய் துர்நாற்றமும் நீங்கும். 

ஆண்மை/விந்து குறை/அதிமதுரம் பொடி

அதிமதுர பொடியுடன் சுத்தமான நெய் மற்றும் தேன் கலந்து நன்றாக குழைத்து இரவில் மட்டும் சாப்பிட்டு பால் குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து கோளாறு குறையும். இந்த செயலியை நிறுவுவதற்கு...

 பித்த நாடி/வாந்தி/அதிமதுரம் பொடி

அதிமதுரப் பொடி, சந்தனத் தூள் ஆகியவற்றை பாலில் கொடுத்து வந்தால் வாந்தி குறையும்.

JOIN KALVICHUDAR CHANNEL