. -->

Now Online

FLASH NEWS


Thursday 10 June 2021

புத்துணர்வை ஊட்டும் ஆட்டோ வாசகங்கள்

ஆட்டோ இலக்கியம்!




வாழ்வில் சோர்ந்து போன பல தருணங்களில் ஆட்டோ வாசகங்கள் என்னிடம் புத்துணர்வை ஊட்டியிருக்கின்றன.

உங்களுக்கும் அப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

நான் பார்த்த ஆட்டோ வாசகங்களை இங்கு பட்டியலிட்டு இருக்கின்றேன்.

இறைவனுக்குப் பயப்படு
மனிதனுக்குப் பயன்படு

உன் வாழ்க்கை உன் கையில்

வெல்பவன் என்றும் விலகுவதில்லை
விலகுபவன் என்றும் வெல்வதில்லை

தொட்டு விடும் தூரத்தில் வெற்றி இல்லை
விட்டுவிடும் (தூரத்தில்) எண்ணத்தில் நானும் இல்லை.

பந்தயமல்ல நண்பனே பயணம்

நீ வாழ பிறரைக் கெடுக்காதே

பணமில்லாத அறிவாளி
உலகத்திற்கு முட்டாள்


கருவறை முதல் கல்லறை வரை
சில்லரை தேவை

விடியும் என்று விண்ணை நம்பு
முடியும் என்று உன்னை நம்பு


வாடகைப் பறவை


வறுமை வந்தால் வாடாதே
வசதி வந்தால் ஆடாதே

தாய்க்குப் பின் தாரம்
தாரம் வந்தபின் தாய் பாரமா

சாலையைப் பார்த்தால் சமத்து
சேலையைப் பார்த்தால் விபத்து

மழைநீர் உயிர்நீர்


தாய் தந்தை தந்த பரிசு

சத்தமிடு முத்தமிடாதே

மோதி விடாதே அத்தனையும் கடன்


மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதே


சிறுகுடும்பம் சீரான வாழ்வு

பாலங்களில் வளைவுகளில் முந்தாதே



வ.முனீஸ்வரன்.