. -->

Now Online

FLASH NEWS


Saturday 19 June 2021

சிறார்கள் மத்தியில் தொற்றுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலைமை உருவாகும் வரை பள்ளிகள் திறக்கப்படாது - நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

 


தீர ஆலோசித்த பிறகே பள்ளிகளை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் -நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

பல்வேறு அம்சங்களை குறித்து தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னரே நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்த முடிவெடுக்கப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே.பால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடுவது விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக அவர் கூறினார். ஆனால் பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் தொற்று பரவல் பலமடங்கு அதிகரித்ததால், அவை உடனே மூடப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதைப் போன்ற நிலைமை நமது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்படாது என நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என கூறியுள்ளார். சிறார்கள் மத்தியில் தொற்றுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலைமை உருவாகும் வரை பள்ளிகள் திறக்கப்படாது எனவும் அவர் கூறினார்.