. -->

Now Online

FLASH NEWS


Saturday 19 June 2021

பள்ளிக் கல்வி - ஆணையர் அவர்களின் இன்றைய ஆய்வுக் கூட்டம் - அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - CEO PROCEEDINGS

பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரை

1 2021 2022 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் விவரம் பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் தகவல் பலகை வைக்க வேண்டும்.

2. ஆங்கில வழி உள்ள பள்ளிகள் அதன் விவரத்தினை அனைவரும் அறியும் வண்ணம் தெரியப்படுத்த வேண்டும்,

3. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சேர்க்கை விவரத்தினை நாள்தோறும் Google Sheet பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. 5,8,10 புதிய வகுப்புகள் முடித்து மாற்று சான்றிதழ் பெறும் மாணவர்கள் அனைவரையும் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்திட தலைமையாசிரியர்கள் உரிய
நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

5. புதிய மாணவர்களின் சேர்க்கை மற்றும் மாற்று சான்றிதழ் வழங்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

6. மேல்நிலை வகுப்புகளில் புதிய பாடப்பிரிவு மற்றும் ஆங்கில வழி துவங்க விரும்பும் பள்ளித்
தலைமையாசிரியர்கள்
அனுமதி கோரும் கருத்துருவினை உடனடியாக சமர்ப்பிக்க
வேண்டும்.

7. 10-ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பட்டியல் (NR )
சரிபாக்கப்பட வேண்டும்.
கல்விச்சுடர்
8. தொலைக்காட்சி வழியாக நடைபெறும் பாடங்களின் ஒளிபரப்பு கால அட்டவணை அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும்.


9. 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான தேவைப்பட்டியலின்படி புத்தகங்களை பெற்று பள்ளியில் தயாராக வைத்திருக்க வேண்டும். உரிய ஆணை வந்த பின்பு மாணவர்களுக்கு
புத்தகங்களை மட்டும் வழங்க வேண்டும்.

10. புத்தகம் பெறப்படாத / தேவைப்படும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடன் முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

11. புத்தகங்கள் கூடுதலாக தேவைப்படும் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேவைப்பட்டியலை
சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

12.2020 -2021 ஆம் கல்வி யாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு விவரங்கள் EMIS
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்
கல்விச்சுடர்
13. கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள், மின்விசிறிகள், பழுதுவிவரங்கள் இடிக்கப்பட
வேண்டிய கட்டிட விவரங்கள் , கழிப்பிட வசதி தேவைப்படும் விவரங்கள் அனைத்தும் EMIS
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

14. பள்ளிக்கு தேவைப்படும் சுற்றுசுவர்களின் அளவை மீட்டரில் EMIS இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்பவேண்டும்

15. 2013- 2014
முதல் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்கன் விவரத்தினை
EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

16. கொரோனாவில் இறந்த பெற்றோர்களின் குழந்தைகளின் முழு விவரத்தினை சார்ந்த
மாவட்டக் கல்வி அலுவலரிடம் உடன் சமர்ப்பிக்க வேண்டும்.

17. அங்கீகாரம் புதுப்பிக்காத உதவி பெறும் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் புதுப்பிக்க
விண்ணப்பிக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.