t> கல்விச்சுடர் 14 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு சென்னையில் இரண்டாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா தொற்று - மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 July 2021

14 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு சென்னையில் இரண்டாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா தொற்று - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று மேலும் 1,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

14 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு சென்னையில் இரண்டாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா தொற்று. நேற்று 139 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று 164 பேருக்கு பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 53 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 21,521 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 2,394 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 98 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



JOIN KALVICHUDAR CHANNEL