t> கல்விச்சுடர் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 July 2021

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு


வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்கள், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை என மொத்தம் 17 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல், நாளை (சனிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 25 (நாளை மறுதினம்) மற்றும் 26-ந்தேதிகளில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL