t> கல்விச்சுடர் பிளஸ்-2 துணைத்தேர்வு 6-ந்தேதி தொடங்குகிறது. தனிபாடங்கள் எழுத அனுமதி இல்லை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 July 2021

பிளஸ்-2 துணைத்தேர்வு 6-ந்தேதி தொடங்குகிறது. தனிபாடங்கள் எழுத அனுமதி இல்லை

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பிளஸ்-2
"பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மதிப்பெண்கள், பிளஸ்-2 செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த
மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணைத்தேர்வு எழுதிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது
அதன்படிஅடுத்த மாதம்         6-ந்தேதி, துணைத்தேர்வு தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பாங்கள் 23-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் நாளை
 (27-ந்தேதி) வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்
 மாணவர்கள் கட்டாயம் அனைத்து பாடங்களையும் எழுத வேண்டும்.குறிப்பிட்ட சில பாடங்களை எழுத அனுமதி கிடையாது
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

6-ந்தேதி தமிழ், 9-ந் தேதி ஆங்கிலம், 10-ந் தேதி இயற்பியல்
பொருளியல், கணினி தொழில்நுட்பம், 13-ந்தேதி வேதியியல்
கணக்குப்பதிவியல், புவியியல், 16-ந்தேதி கணிதம், விலங்கியல்
வணிகவியல், 18-ந் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு
வணிகக் கணிதம், 19-ந் தேதி கணினி அறிவியல், புள்ளியியல்
தேர்வுகள் நடக்கிறது.

JOIN KALVICHUDAR CHANNEL