t> கல்விச்சுடர் ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சட்னி செய்வது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 July 2021

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சட்னி செய்வது எப்படி?




கோங்குரா என அழைக்கப்படும் புளிச்ச கீரை மிகவும் ஆரோக்கியம் நிறைந்த கீரைகளுள் ஒன்று. மிகவும் சுவையாக இருக்கும் இதன் இலைகளை சிலர் சும்மாவே உண்பார்கள். மேலும் இவற்றில் தயார் செய்யப்படும் சட்னி மற்றும் தொக்கை சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ஜோராக இருக்கும்.



கோங்குரா சட்னி தேவையான பொருட்கள்:

புளிச்ச கீரை - 1 கட்டு

புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு

பூண்டு - 15 பல்

மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன்

தனியா (விதை) - 1 டீ ஸ்பூன்

கடுகு - 1 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டீ ஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

எண்ணெய் - 1 கப்.


செய்முறை:

முதலில் புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காயவைக்கவும். அதன் பின்னர் புளியை கழுவிவிட்டு சிறிதளவு வெந்நீர் விட்டு ஊறவைக்த்துக்கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுத்து, அவை ஆறிய பின் மிக்சியில் இட்டு நொறு நொறுப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் புளி தண்ணீர் மற்றும் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கீரையை இட்டு நன்றாக வதக்கவும். கீரையில் உள்ள நீர் வற்றும்வரை வதக்கி கொள்ளவும்.

அதன்பின்னர், மீதமுள்ள எண்ணெய்யில் கடுகு, சீரகம், மீதமுள்ள பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் ஆகிவற்றை சேர்த்து முன்னர் வதக்கியுள்ள கீரையோடு சேர்க்கவும்.

எண்ணெய் சூடாக இருக்கும் போதே இதனுடன் அரைத்துவைத்துள்ள பொடி, மிளகாய் தூள் உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக கிளறினால் நாம் விரும்பிய கோங்குரா சட்னி தயாராக இருக்கும். இவற்றை சூடான சாதம், சப்பாத்தி என அனைத்துடனும் சேர்த்து ருசித்து மகிழவும்.




JOIN KALVICHUDAR CHANNEL