t> கல்விச்சுடர் வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மிக கனமழை பெய்ய வாய்ப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 July 2021

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மிக கனமழை பெய்ய வாய்ப்பு




கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா, ஒடிசா இடையே வங்கக் கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்.

தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

JOIN KALVICHUDAR CHANNEL