t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 July 2021

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழகத்தில் புதிதாக 1,859 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,859 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் 2,145 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 25,00,434 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 34,023 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய நிலவரப்படி பேர் இன்னும் 21,207 நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மீண்டும் அதிகரிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை 1,756 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை 1,859 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரணம் புதன்கிழமை 1,55,199 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை 1,56,359 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனவே, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட விகிதம் புதன்கிழமையைக் காட்டிலும் வியாழக்கிழமையில் பெரிதளவில் மாற்றம் இல்லை




JOIN KALVICHUDAR CHANNEL