. -->

Now Online

FLASH NEWS


Monday 26 July 2021

நகைகளை பராமரிக்க எளிய வழி முறைகள்.



ஆடைகளை கவனமாக பராமரிக்கும் நாம், நகைகளை என்ன செய்கிறோம்? நமக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகளால், நகைகள் வீணாகின்றன.சுத்தம் செய்வதில்லைஉங்கள் கம்மல்கள், மோதிரம், பெண்டன்ட்களை எளிதில் கிருமிகள் தங்கக்கூடும். நகைகள் பாக்டீரியாக்களை பரப்பும் இடமாக மாறும் என்பதால், வெதுவெதுப்பான நீரில் அடிக்கடி கழுவ வேண்டும். தினமும் அணியும் நகைகளை, குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்வது முக்கியம். ஆல்கஹால் இருக்கும் சானிடைசர்கள், பாதிக்கும் என்பதால் பாதுகாப்பாக பயன்படுத்தவும்.குளிக்கும்போது நகைகள்ஒவ்வொரு முறை குளிக்கும்போதும், நகைகளை கழற்றுவது உங்களுக்கு சலிப்பாக இருக்கும். ஆனால், குளிக்கையில் சிறிய நகைகளை இழப்பதற்கு வாய்ப்புள்ளது.


உப்பு, கடினமான சோப்புகளால் நகைகள் பாதிக்கப்படும். நீச்சல் குளங்களில போடப்படும் குளோரின், விலைமதிப்பற்ற கற்கள், உலோகங்களை சேதப்படுத்தும். நகைகள் தொலைந்து போவதற்கும் வாய்ப்புள்ளது.சிக்குகள்நகைகளை கழற்றியவுடன், அப்படியே அலமாரியில் அல்லது பெட்டியில் அணிவது போன்று மாட்டினால், செயின்கள், நெக்லஸ்கள் போன்ற நகைகளில் எளிதாக சிக்குகள், முடிச்சுகள் விழுந்து விடும். இவற்றை எடுப்பது மிகவும் சிரமம்.

நாளடைவில் இந்த இடங்களில் நகைகள் அறுந்து போக வாய்ப்புள்ளது. கழற்றியவுடன் எப்போதும் ஊக்குகளை மூடுவதன் மூலம், சிக்குகள் ஏற்படுவதை தடுக்கலாம்.பாதுகாப்பான சேமிப்புநகைகளின் நிலைத்த தன்மைக்கு, அவற்றை பாதுகாப்பாக சேமிப்பது முக்கியம். ஈரப்பதம், காற்றோட்டம் மிக்க இடத்தில், நகைகளை சேமிக்க கூடாது. ஸ்டெர்லிங் சில்வர் போன்ற நகைகள் காற்று மற்றும் ஈரப்பதத்தில், சீக்கிரம் பளபளப்பை இழக்கும்.

தனியாக பெட்டிகளில் சேமிப்பது சிறந்தது. ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க, ஒவ்வொரு நகைக்கும் தனி, தனி பெட்டிகளை பயன்படுத்தவும்.தரமற்ற மெட்டல்நவீன பேஷன் நகைகள், பெண்களை மிகவும் கவர்ந்து வருகிறது. குறைந்தவிலை, வெரைட்டி டிசைன் என பார்த்தவுடன், இதுபோன்ற நகைகளை வாங்குகிறோம். அது எந்த மெட்டலில் செய்யப்படுகிறது என அறிந்துகொள்வது அவசியம். தரமற்ற மெட்டல்களால் செய்யப்படும் நகைகள் சீக்கிரம் பளபளப்பை இழந்து, வீணாகும். தரமற்ற நகைகளால் சருமத்திற்கு அலர்ஜி போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.