சிபிஎஸ்இ பள்ளிகளைப் போலவே, தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், சிபிஎஸ்இ போல தமிழக பள்ளிகளிலும் பாடத் திட்டங்கள் குறைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நிச்சயமாக குறைக்கப்படும். விரைவில் பாடத் திட்டங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். பாடத் திட்டங்களை குறைக்காமல் பொதுத் தேர்வுகளை அறிவிக்க முடியாது என பதிலளித்தார்.
எவ்வளவு சதவிகித பாடங்கள் குறைக்கப்படும் என்பது ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விக்கு, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.