t> கல்விச்சுடர் சுவையான ருசியான சிக்கன் நூடுல்ஸ் எப்படி செய்வது? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 July 2021

சுவையான ருசியான சிக்கன் நூடுல்ஸ் எப்படி செய்வது?



குழந்தைகளின் உணவு பட்டியலில் மிகவும் பிடித்த உணவாக முதலில் இருப்பது நூடுல்ஸ் தான். அதுவும் சிக்கன் நூடுல்ஸ் செய்யராங்கனு தெரிந்தால் போதும் குழந்தைகள் மட்டும் இல்லைங்க பெரியவங்களும் வீட்டை விட்டு நகரமட்டாங்க அப்படி பட்ட சிக்கன் நூடுல்ஸ் எளிமையா செய்வது எப்படி என்று இப்ப பாக்கலாம்.

 

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 200 கிராம்

நூடுல்ஸ் - 2 பாக்கெட்

வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3

மிளகு தூள் - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

சிக்கன் நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு, வறுவல் மசாலா,உப்பு, லெமன் சாறு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து பின் எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.


அதன்பின், அகலமான ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சூடானதும், அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின் பொரித்த வைத்துள்ள சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும். பிறகு சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். கடைசியில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்.

மணக்க மணக்க சுவையான சிக்கன் நூடுல்ஸ் தயார்.



JOIN KALVICHUDAR CHANNEL