t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 July 2021

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று மேலும் 1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 60,897 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,986 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,59,597 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,74,46,148 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,103 பேர் ஆண்கள், 883 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,95,354 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,64,205 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,178 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,04,805 ஆக உயர்ந்துள்ளது.

26 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 19 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,076 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL