தமிழகத்தில் இன்று மேலும் 1,830பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,830 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,830.
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 130.
* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 1,661.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,86,933 பேர். பெண்கள் 10,57,899 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.
* இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,062 பேர். பெண்கள் 768 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,516 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 24,86,192 பேர்.
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 24 பேர் உயிரிழந்தனர்.