தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் அளிக்கப்படும் கீழ்காணும் 12 அம்சக்கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றித்தரும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
1.செப்டம்பர் மாதம் முதல் 9, 10 ,11 ,12 பள்ளிகள் திறப்பு என்பதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது அதேநேரத்தில் மாணவர்கள் நலன்கருதி 5 பாடவேளைகள் மட்டும் செயல்படவும். மேலும் கொரோனா காலகட்டத்தில் எழுத்துகளே மறந்து போகியிருக்கும் மாணவர்களான
1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கும் சுழற்சிமுறையில் பள்ளிகள் திறக்கப்பரிசீலிக்கவேண்டும்.
2. தொழில்நுட்பவளர்ச்சியினைப்பயன்படுத்தி கற்கும்வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கவேண்டும்.
3.அனைத்துப்பள்ளி களிலும் தூய்மையான கழிவறைகள் உறுதிசெய்ய நிரந்தர தூய்மைப்பணியாளர்களை நியமிக்கவேண்டும்.
4.அனைத்துப்பள்ளிகலும் குறைந்தபட்சம் ஒரு வளவகுப்பறை (Smart Class) நிறுவிடவேண்டும்
5.. கல்வி உரிமை சட்டத்தின்படி 23 -8- 2010 ற்குப் பிறகு தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.ஆனால் நடைமுறைகளுக்கு முன்பாகவே பணி நியமனம் செய்யப் பட்டவர்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தது போல பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகளின் படி 16 -11 - 2012 வரை பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக ஊதியத்தை தவிர வேறு எவ்வித பலன்களும் கிடைக்காமல் சிக்கலில் தவித்து வரும் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
6.பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு மாற்றுப் பணியாகப் பள்ளி துணை ஆய்வாளர்(D.I) பதவியில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு பணியிடங்களாக மாற்ற வேண்டும்.மேலும் முறைகேடுகளை தடுத்திடப் பள்ளி துணை ஆய்வாளர் பதவி பணியில் இருக்கும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு அல்லது பணியில் இருக்கும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்குள் தேர்வு மூலம் பணி அமர்த்தப்பட வேண்டும்.
7..1996 - 1997ல் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தபட்ட பட்டியல் இனபட்டதாரி ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிவரன்முறை செய்து பணபலன்கள் அளிக்காவிட்டாலும் பணிமூப்பு வழங்கப் பரிசீலிக்கவேண்டும்
8. மாணவர்களிடம் நல் ஒழுக்கத்தினை பெறும் பொருட்டு நீதிபோதனைக்கென்று தனி புத்தகம் வடிவமைக்கப்பட வேண்டும்.
9.ஆன்லைன் வகுப்புகள் முறைப்படுத்தவும் அரசு கண்காணிக்கவும் பாதுகாப்பாக புதிய மென்பொருளை வடிவமைத்திட வேண்டும்.
10.கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைன் வழி வகுப்புகள் தொடர்வதால் மேலும் மாணவர்கள் நலன் கருதி பாடத்திட்டம் 20% குறைக்கப்பட வேண்டும்.
11.குழந்தைகளின் கற்கும் ஆர்வத்தை தூண்டிட
வகுப்பு 1 முதல் 3 வரை கற்றலில் இனிமையை கொண்டுவர குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் உள்ள கருத்துக்களை கார்ட்டூன் வடிவில் டோரா புஜ்ஜி ,மோட்டு பட்லு போன்று வடிவமைக்கப்பட வேண்டும்.
12..பணிகள் விரைந்து முடிக்கும் வகையில் சமக்ரசிக்சா (SSA RMSA) தனி CEO நியமனம் வேண்டும்.
மேற்கண்ட 10 கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
