t> கல்விச்சுடர் மல்யுத்தத்தில் வெள்ளி வென்றார் ரவிகுமார் தாஹியா - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 August 2021

மல்யுத்தத்தில் வெள்ளி வென்றார் ரவிகுமார் தாஹியா



ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த இறுதிப் போட்டி; ரஷ்ய வீரர் வெற்றி பெற்றதால் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியாவிற்கு வெள்ளிப் பதக்கம்.

ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று மல்யுத்த போட்டிகள் நடந்தன. ஆண்கள் ‘பிரீஸ்டைல்’ 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 23, களமிறங்கினார். இதில் ரஷ்யாவின் ஜாவுர் உகுவேவை 26, எதிர்கொண்டார். 

மொத்தம் 6 நிமிட போட்டி, தலா 3 நிமிடம் கொண்ட இரு ‘பீரியடு’ ஆக நடத்தப்பட்டது. கடைசியாக பங்கேற்ற 15 சர்வதேச தொடர்களில், 12 தங்கம் உட்பட 14 பதக்கம் வென்றவர் ஜாவுர். தவிர 2 முறை உலக சாம்பியன் ஆனவர் என்பதால் ரவிக்குமார் மிக எச்சரிக்கையாக மோதினார். 

ஆனால் தொடர்ந்து 15 போட்டிகளில் வென்ற வேகத்தில் வந்த ஜாவுர், முதல் ‘பீரியடில்’ 2 புள்ளியை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இவர் 4–2 என முந்தினார். இரண்டாவது ‘பீரியடில்’ ரவிக்குமார் ஆதிக்கம் செலுத்துவார் என நம்பப்பட்டது. மாறாக ரவிக்குமார் பிடியில் இருந்து எளிதாக நழுவினார் ஜாவுர். 

ஒருகட்டத்தில் ரவிக்குமார் 4–7 என பின்தங்கினார். கடைசி நேரத்தில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை ரவிக்குமார் மீளவே இல்லை. முடிவில் 4–7 என தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். 

JOIN KALVICHUDAR CHANNEL