அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ஈரோடு, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 6 இடங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாக்டர் மற்றும் சட்டக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் 14 அரசு இயங்கி வருகின்றன.
அதையடுத்து மேலும் சில புதிய சட்டக் கல்லூரிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டு வந்தது. இந்நிலையில், சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்புகளுக்கெனத் தனித் துறை தொடங்கப்பட்டு, அதற்குக் கீழ் 6 புதிய சட்டக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அண்ணாமலை பல்கலை. வளாகம், ஈரோடு, மயிலாடுதுறை, தென்காசி, திருப்பூர், விருதுநகர் ஆகிய இடங்களில் சட்டக் கல்லூரிகளை அமைப்பதற்குச் சட்டத் துறை இடம் தேர்வு செய்து உயர் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகம் தனது கருத்தைச் சமர்ப்பிக்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Source The Hindu Tamil